Publish Date: Mon, 15 Nov 2021 (11:18 IST)
Updated Date: Mon, 15 Nov 2021 (11:20 IST)
கோவையில் சூலூர் அருகே பைக் திருடர்களை காவல் ஆய்வாளர் துரத்தி சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே நள்ளிரவில் காவல் ஆய்வாளர் மாதையன் ரோந்து வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருவர் நிற்பதை கண்ட அவர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது திடீரென அவர்கள் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
உடனே தனது ரோந்து காரில் அவர்களை துரத்தி சென்றுள்ளார் மாதையன். சிறிது தூரம் சென்றதும் அவர்கள் பைக்கை விட்டுவிட்டு ஓட்டமாய் தப்பி ஓடியுள்ளனர். ஆனால் அவர்களை விடாத மாதையன் தானும் இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் அவர்களை துரத்தி சென்று பிடித்துள்ளார். அதில் ஒருவர் பிடிபட ஒருவர் தப்பியுள்ளார்.
விசாரனையில் பிடிபட்ட நபர் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிஹரசுதன் என்றும், அவர் சங்கர் என்பவருடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தப்பி சென்ற சங்கரை போலீஸார் தேடி வருகின்றனர்.