Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்குதான் கண்ணீரே கிடையாதே..! – கே.எஸ்.அழகிரிக்கு சீமான் பதில்!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (13:42 IST)
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்திய நிலையில். கே.எஸ்.அழகிரிக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதை பல தமிழக அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டி போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய தமிழக காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பேரறிவாளன் விடுதலை தனக்கு ரத்த கண்ணீரை வரவழைப்பதாக கூறினார்.

அதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே, அதில் எங்கே ரத்தம் வருவது, நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியே இருந்து யோசியுங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments