வடகிழக்கு பருவமழை இப்போது துவங்கும் அப்போது துவங்கும் என தேதி அறிவித்து நாட்கள் மட்டுமே கடந்து செல்கிறதே தவிர மழை வந்த பாடில்லை.
வழக்கமாக அக்டோபர் 15 முதல் 20 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்க வேண்டும். ஆனால், வரும் 26 ஆம் தேதி மழை வரும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை, இன்னும் சில நாட்கள் தாமதமாகி நவம்பர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெதர்மேன் கூறியது விரிவாக, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தது போன்று இம்மாதம் 26 ஆம் தேதி துவங்குவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கின்றன.
வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால், சில நாட்கள் தாமதமாக நவம்பர் முதல் வாரத்தில் துவங்குவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
ஆனால், அடுத்து வரும் நாட்களில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் அதை சுற்றியுள்ள சில மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.