தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழிய வாப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பின்வருமாறு, வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையும், அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு.
சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.