Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

Lady Police

Senthil Velan

, திங்கள், 17 ஜூன் 2024 (17:58 IST)
காஞ்சிபுரத்தில் பின் காவலர் ஒருவருக்கு  அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி புரிந்து வருபவர் டில்லி ராணி. இவர் பணி முடிந்த பிறகு காவல் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். 
 
இதில் டில்லி ராணியின் வலது கை பகுதியில் இரண்டு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டி விட்டு மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயம் அடைந்த காவலர் டில்லி ராணியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
குடும்ப தகராறில் டில்லிராணியை அவரது கணவரே தாக்கியதாக கூறப்படும் நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணவன்,  மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக டில்லிராணி பிரிந்து வாழும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!