நடிகர் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீது மூன்று பிரிவுகளும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி என்ற தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் வாக்குவாதம் செய்த பெண் காவலர் ஒரு கட்டத்தில் திடீரென கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டது.
விவசாயிகள் போராட்டத்தை கங்கனா ரனாவத் கொச்சைப்படுத்தியதாக பெண் காவலர் அறைந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த புகார் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று பெண் காவலர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் சற்றுமுன் வெளியான தகவலின் படி பெண் காவலர் குல்விந்தர் கவுர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பெண் காவலர் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த போது ஃபயர்விட்ட நேட்டிசன்கள் தற்போது கைது நடவடிக்கைகளில் இருந்து அவரை காப்பாற்ற உதவுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.