Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

Siva
ஞாயிறு, 30 மார்ச் 2025 (09:52 IST)
நேற்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. மதுரை, சேலம், கரூர், திருச்சி, திருவள்ளூர், திருத்தணி, வேலூர், ஈரோடு, தர்மபுரி, சென்னை, கோவை நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்தது. இதில், மதுரையில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
 
இந்த நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும், ஏப்ரல் 2 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை நீடித்து, அதன் பிறகு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாலும், வெப்பநிலை 100 டிகிரியை தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முழுவதும் வறண்ட வானிலை நிலவும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments