தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 10 மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை சீசன் முடிந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவு வெப்பம் நிலவுகிறது.
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் என 10 மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் தேவையின்று வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அறிவுறுத்தியுள்ளார்.
Edit by Prasanth.K