மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

Siva
ஞாயிறு, 30 மார்ச் 2025 (09:47 IST)
மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் நிலைக்கட்டும் என தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் அதன் பின்னர் முதல் மாநில மாநாடு நடத்தி காட்டினார் என்பதும் இதனை அடுத்து சமீபத்தில் முதல் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது என்பது தெரிந்தது.
 
மத்திய மாநில அரசுகளை ஒரே நேரத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வரும் விஜய் தமிழக அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவார் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
 
இந்த நிலையில் மறைந்த அரசியல் தலைவர்களின் பிறந்த நாள், அனைத்து மத பண்டிகைகள்  ஆகிய நாட்களில் தனது வாழ்த்துக்களை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கும் விஜய் தற்போது யுகாதி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தை தெரிவித்த வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:
 
தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments