Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறக்கப்படுமா? மாணவர்களுக்கு குஷியான் செய்தி சொன்ன அமைச்சர்!!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:26 IST)
கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு என அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படவில்லை. அதோடு பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் கடந்த ஜூன் மாதமே இந்த கல்வி ஆண்டுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. 
 
ஏற்கனவே மூன்று மாதங்கள் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆகி விட்ட நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலை உள்ளது. எனவே, பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு என தெரிவித்துள்ளார். அதேபோல டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments