Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

Rain Floods

Siva

, ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (12:42 IST)
புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை முகாம்களாக மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக் கடலில் தோன்றிய புயல் புதுவை அருகே கரையை கடந்த நிலையில், புதுவையில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 410 சென்டிமீட்டர் மழை பெய்து, புதுவையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். வெள்ளம் காரணமாக, வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்கான இடமின்றி மிகவும் கடுமையான பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

மேலும் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மேலும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக புதுவை மாவட்ட ஆட்சியர், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளை பாதுகாப்பு முகாம்களாக மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்