Publish Date: Fri, 03 Dec 2021 (22:43 IST)
Updated Date: Fri, 03 Dec 2021 (22:46 IST)
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உள்ளிட்ட 9 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பள்ளி வாகனமானது தென்கினலூர் என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழிவிட ஓரமாக ஒதுங்கியது. இதில் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விபத்திற்குள்ளானது.
இதில், 9 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் விபத்தில் சிக்கினர். அருகே இருந்த மக்கள் மாணவர்களையும் ஓட்டுநரையும் மீட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.