Publish Date: Fri, 03 Nov 2017 (17:20 IST)
Updated Date: Fri, 03 Nov 2017 (17:23 IST)
தம்பி நடிகர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இருந்து தொலைக்காட்சி நடிகை நீக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் டிவி சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் நீளமான பெயரைக் கொண்ட நடிகை. இவர் ஹீரோயினாக நடித்த முதல் படம், காமெடியால் ஓரளவு ஓடியது. அடுத்ததாக, சேதுபதி நடிகரின் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். மேலும், தம்பி நடிகர் நடிக்க இருக்கும் புதிய படத்திலும் ஹீரோயினாக கமிட்டாகியிருந்தார். இந்தப் படத்தில், ‘பிரேமம்’ படத்தில் நடித்த ஒரு நடிகையும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இப்போது, காட்டை மையமாகக் கொண்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியான படத்தில் நடித்த மும்பை நடிகையை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். டிவி சீரியல் நடிகை படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதுதான் கோடம்பாக்கத்தின் கிசுகிசுவாக இருக்கிறது.