Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் மரணம் – விருத்தாசலத்தில் பரபரப்பு !

Advertiesment
பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் மரணம் – விருத்தாசலத்தில் பரபரப்பு !
, வியாழன், 21 நவம்பர் 2019 (14:14 IST)
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவன் வளாகத்தில் மயக்கமடைந்து மரணமடைந்துள்ள சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாத்திரக்கடை வைத்திருப்பவர் சந்திரசேகர். இவரது  ஒரு மகளும் சதீஷ் என்ற மகனும் உள்ளனர். சதீஷ் அங்குள்ள செந்தில் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற சதீஷ் 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்க்க, அவர்கள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சதிஷை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் நன்றாக சென்ற மகன் எப்படி உயிரிழந்தான் எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து தாசில்தார் வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தங்கள் மகனின் மரணம் குறித்து விரைந்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி சதிஷின் உடலை வாங்க மறுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் சொன்னா கேப்பாங்களா? – ரஜினி, கமல் குறித்து டி.ஆர்!