Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு !!

Advertiesment
Schools Reopening
, வியாழன், 8 அக்டோபர் 2020 (08:29 IST)
புதுச்சேரி மாநிலத்தில் இன்றுமுதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 
 
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத பாதியில் இருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் பள்ளிகள் இந்த மாதம் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் பின்னர் இந்த முடிவு அரசால் பின்வாங்கப்பட்டது.  
 
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்றுமுதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் 10,12 ஆம் வகுப்புகளுக்கு 3 நாள்களும், 9,11 ஆம் வகுப்புக்கு 3 நாள்களும் என வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் இயங்கும். 
 
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்படாது என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிவேகமாக பரவும் கொரோனா: டாப் கியரில் இந்தியா!