Publish Date: Sat, 26 Sep 2020 (16:16 IST)
Updated Date: Sat, 26 Sep 2020 (16:29 IST)
புதுச்சேரி மாவட்டம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் குற்ற வழக்கு ஒன்றுக்காக 26 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் 1989 ஆண்டு ஒரு பெண்ணை கடத்திச் செல்ல முயன்றதாக 17 பேர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சந்திரசேகரன் என்பவர் 1993 ஆம் ஆண்டு வழக்கில் ஆஜாராகாமல் தலைமறைவானார்.
அதிலிருந்து அவரைப் போலிஸார் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். இந்த நிலையில் சந்திரசேகர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதாக திருநள்ளாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்று அவரைக் கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். இதன் மூலம் 26 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.