Publish Date: Tue, 16 Nov 2021 (15:21 IST)
Updated Date: Tue, 16 Nov 2021 (15:23 IST)
உத்தரபிரதேசத்தில் போர் விமானங்களும் தரையிறங்கும் வசதியுடன் கூடிய பூர்வாஞ்சால் விரைவு சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோவுடன் கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் விரைவு சாலையாக பூர்வாஞ்சல் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 341 கி.மீ தூரம் கொண்ட இந்த சாலையை அமைக்க ரூ.22,500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விரைவு சாலையை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மிகப்பெரும் நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.