Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை.. ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு..!

school student

Mahendran

, சனி, 13 ஏப்ரல் 2024 (08:04 IST)
தமிழகத்தில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல்  ஏப்ரல் 21 வரை தொடா் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோ்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் ஆசிரியர்கள் வாரவிடுமுறை, மற்றும் தேர்தல் விடுமுறை தவிர்த்து மற்ற நாட்கள்  பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாணவா்களுக்கு 2 மாதங்கள் வரை விடுமுறை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு அடைந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான முழு ஆண்டு தேர்வும் ஏப்ரல் இரண்டாம் தேதி தொடர்ந்து தொடங்கி நடந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
 
 இந்த நிலையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சில தேர்வுகள் இன்னும் நடைபெற இருந்தாலும் தேர்தலை முன்னிட்டு பள்ளிகள் தேர்தல் முகாம்களாக மாறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 
 
நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் ஏப்ரல்   21 வரை விடுமுறை என்றும் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் மாணவர்களுக்கு விடுமுறை என்றாலும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தேர்தல் பணி, விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் வளர்ச்சி பெறாததற்கு திமுக அதிமுகவின் ஊழலே காரணம்..! அமித் ஷா காட்டம்...!!