6ம் வகுப்பு மாணவியின் ஆடையை கிழித்த தலைமை ஆசிரியர்? உறவினர் முற்றுகையால் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 15 மார்ச் 2024 (19:15 IST)
சிவகங்கை அருகே உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவியின் ஆடையை தலைமை ஆசிரியர் கிழித்ததாக கூறப்படும் நிலையில் மாணவியின் உறவினர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை என்ற பகுதியை அடுத்து காரைக்குடி என்ற கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் சீருடையை தலைமை ஆசிரியர் பிரிட்டோ என்பவர் கிழித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது 
 
இது குறித்து அழுது கொண்டே அந்த மாணவி அருகில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பள்ளி முன் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர் 
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றனர். தலைமை ஆசிரியரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டதை அடுத்த அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உபெர் உதவியால் பிறந்த குழந்தைக்கு 10 வயது.. இணை நிறுவனர் டிராவிஸ் கலானிக் நெகிழ்ச்சி பதிவு..!

'துச்சாதனன்' + 'துரியோதனன்' = மம்தா பானர்ஜி.. பாஜக விமர்சனத்தால் பரபரப்பு..!

ஓடும் வேனில் இளம்பெண் 2 மணி நேரம் பாலியல் பலாத்காரம்.. அதன்பின் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

சிபில் ஸ்கோர்.. பான் - ஆதார் இணைப்பு.. சிம் இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப்.. நாளை முதல் என்னென்ன மாற்றங்கள்?

திருத்தணி சம்பவம்!. என் வீட்டு பக்கத்திலேயே!.. சந்தோஷ் நாராயணன் பகீர்!...

அடுத்த கட்டுரையில்