ஆன்லைன் கிளாஸ் வகுப்புகளைக் கவனிப்பதற்கு செல்போன் இல்லாத காரணத்தால் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவ மாணவிகளுக்கு செல்போன் தேவைப்படுகிறது. பல வீடுகளில் இன்னமும் செல்போன் கூட வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோரின் பொருளாதார சூழல் உள்ளது.
இந்நிலையில் சென்னை ராமாவரத்தைச் சேர்ந்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சின்னையா என்பவரின் மகள் யாமினி ( 17) தனது பெற்றோரிடம் செல்போன் கேட்டுள்ளார். அவர்கள் இன்னும் சில நாட்களில் வாங்கித் தருவதாக சொல்லியுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவமானது அவரது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற தற்கொலை தமிழகத்தில் நடப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.