தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு அரசின் கல்வித்தொலைக்காட்சி வழி நடத்தப்பட உள்ள பாடத்திட்டங்கள் அறிவிப்பு மற்றும் மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள் வழங்குதல் ஆகியவற்றை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின்.
தமிழகத்தில் இரண்டாம் கொரொனா தொற்று பரவிவரும் நிலையில், ஆன்லைன் வாயிலாகக் கற்பித்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள், அடங்கிய வீடியோ தொகுப்பை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்ஹ்டு முதல்வர் தொடங்கி வைக்கிறார். தினமும் காலை 5:30 மணி முதல் இரவு 10 மணிவரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தபட உள்ளது. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விலையில்லா பாடப்புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கும் பணியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.