Publish Date: Sat, 19 Jun 2021 (15:27 IST)
Updated Date: Sat, 19 Jun 2021 (15:38 IST)
தமிழகத்தில் திங்கள் முதல் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இப்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இந்த வாரம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இது சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.