Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொபைல் எண்ணை தெரிவித்து துப்பாக்கி பட பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என கையில் லத்தியுடன் எஸ்.பி. வருண்குமார்! அச்சத்தில் சமூக விரோதிகள்!

Advertiesment
மொபைல் எண்ணை தெரிவித்து துப்பாக்கி பட பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என கையில் லத்தியுடன் எஸ்.பி. வருண்குமார்! அச்சத்தில் சமூக விரோதிகள்!

J.Durai

, சனி, 21 செப்டம்பர் 2024 (15:49 IST)
திருச்சி மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் ஆக இருப்பவர் வருண்குமார்,இவர் பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 
 
இந்நிலையில் சினிமா பாணியில், 'ஐ ஆம் வெயிட்டிங்' என்ற டயலாக்குடன், எஸ்.பி., வருண்குமார், தன் மொபைல் போனில், கையில் லத்தியுடன் நிற்பது போல, வாட்ஸ் ஆப்  ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
அதில், குற்றங்களை பட்டியலிட்டு, 
புகார் தெரிவிக்க விரும்பினால், என்னை, 9487464651 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் நிலையத்தில் எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாக இருந்தவர் விஜயகுமார். அதுபோல, மண்ணச்சநல்லுார் காவல் நிலையத்தில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசாக இருந்தவர் வினோத். 
 
இவர்கள் இருவரும் அந்த பகுதியில் நடக்கும் சட்ட விரோத லாட்டரிவிற்பனைக்குஉடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இருவரையும் நேற்று முன்தினம் இரவு, ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி.வருண்குமார்உத்தரவிட்டார்.
 
இவர்களில், போலீஸ்காரர் விஜயகுமார் அண்மையில் அடிதடி வழக்கில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர் என்பதும், 
அதேபோல் திருச்சி மாவட்ட எல்லைக்குள் நடைபெறும் கஞ்சா, லாட்டரி, கள்ள மது விற்பனை, பொது மக்களுக்கு இடையூறாக வாகனத்தில் வீலிங் செய்து அலப்பறையில் ஈடுபடும் இளைஞர்கள், கட்டப்பஞ்சாயத்து, ஏமாற்றுதல், மறைமுக மிரட்டல் எடுப்பவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நியாயமான முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!