Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் திருச்சி மாவட்ட ஆட்சியர்பிரதீப் குமார் வேண்டுகோள்!

Advertiesment
over heat increasing

J.Durai

கோயம்புத்தூர் , புதன், 24 ஏப்ரல் 2024 (15:08 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வட  மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் இன்று 24ந்தேதி  ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய  தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்,குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?. இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி..!