நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கர் 6 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறை குறித்து அவமதிப்பு செய்யும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது மத்திய கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது அரசுப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் அவரை பார்வையாளர்கள் சந்திக்க மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக ரெட்பிக்ஸ் சேனலின் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.