Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிராகரிக்கப்பட்ட 2,743 மனுக்கள், பறிமுதல் செய்யப்பட்ட ரூ 83.99 கோடி ரொக்கம்: தமிழக தேர்தல்!

நிராகரிக்கப்பட்ட 2,743 மனுக்கள், பறிமுதல் செய்யப்பட்ட ரூ 83.99 கோடி ரொக்கம்: தமிழக தேர்தல்!
, திங்கள், 22 மார்ச் 2021 (13:00 IST)
தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்பு மனுக்களில் 4,512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன, 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர்.
 
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வரை 7,133 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 6,080 பேரும், பெண்கள் 1,050 பேரும் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
 
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்பு மனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் முடிவாக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ 83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கா நம்மை 200 ஆண்டுகள் ஆண்டது… முதல்வர் உளறல்!