ஆண்டவனாலும் முடியாதை சசிகலா முடிப்பார்: கட்சி தாவிய ராஜவர்மன் பேட்டி!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (13:13 IST)
அமமுகவில் இணைந்த பின்னர் ராஜவர்மன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. இதில் தற்போது சாத்தூர் எம்.எல்.ஏவாக உள்ள ராஜவர்மனுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை வெற்றிபெற விட மாட்டேன் என ராஜவர்மன் பேசியிருந்த நிலையில் அவருக்கு தொகுதி வழங்காததற்கு ராஜேந்திர பாலாஜியின் அழுத்தம் காரணம் என அவரது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்தித்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்துள்ளார். இதனால் சாத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் ராஜவர்மன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அமமுகவில் இணைந்த பின்னர் ராஜவர்மன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் எனக்கு தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்கவில்லை. வெற்றி வாய்ப்பு இருக்கும் யாருக்கும் அதிமுக தலைமை சீட் வழங்கவில்லை. 
 
ஆண்டவனாலும் இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது என தெரிவித்த அவர் சசிகலா ஒருவரால்தான் அதிமுகவை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு சாவு மணி அடிச்சாச்சி!.. மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!...

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments