Publish Date: Thu, 11 Mar 2021 (11:43 IST)
Updated Date: Thu, 11 Mar 2021 (11:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. இதில் தற்போது சாத்தூர் எம்.எல்.ஏவாக உள்ள ராஜவர்மனுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை வெற்றிபெற விட மாட்டேன் என ராஜவர்மன் பேசியிருந்த நிலையில் அவருக்கு தொகுதி வழங்காததற்கு ராஜேந்திரபாலாஜியின் அழுத்தம் காரணம் என அவரது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தனக்கு சீட் வழங்கப்படாத நிலையில் ராஜவர்மன் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்தித்துள்ளார். எனவே ராஜவர்மன் அமமுகவிற்கு கட்சி மாறுவாரா? அமமுக சார்பில் சாத்தூரில் போட்டியிடுவாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Prasanth Karthick
Publish Date: Thu, 11 Mar 2021 (11:43 IST)
Updated Date: Thu, 11 Mar 2021 (11:46 IST)