அதிமுகவில் தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. இதில் தற்போது சாத்தூர் எம்.எல்.ஏவாக உள்ள ராஜவர்மனுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை வெற்றிபெற விட மாட்டேன் என ராஜவர்மன் பேசியிருந்த நிலையில் அவருக்கு தொகுதி வழங்காததற்கு ராஜேந்திரபாலாஜியின் அழுத்தம் காரணம் என அவரது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்தித்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்துள்ளார். இதனால் சாத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் ராஜவர்மன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.