Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் மரண வழக்கு ; 3 போலீஸார் மன அழுத்தத்தில் இருந்தனர் சிபிசிஐடி தகவல் !

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (16:23 IST)
வருவாய் துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் போலிஸார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவமானது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமானவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஒருமித்த குரல் எழுந்துள்ளது.

இப்போது வழக்கு சிபிசிஐடி போலிஸார் கைவசம் உள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதையடுத்து காவல் நிலையத்தில் விசாரணை மற்றும் தடவியல் நிபுணர்களின் சோதனைகள் நடந்து முடிந்துள்ளன. இதனால் மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் அந்த ஸ்டேஷனை மாற்றும்படி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன.

160 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக காவல்துறை வருவாய் துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  ரகுகணேஷ், பாகிருஷ்ணன் ஆகிய மூவரிடமும் சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் மூவரும் மன அழுத்தத்துடன் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகிறது.

மேலும் கைதானவர்களை ஏன் தாக்கினீிர்கள் எனறு கேள்வி எழுப்பட்டபோது, சாதாரண கைதிகளை போல  தான் அவர்களை தாக்கினோமானால் உயிரிழப்பு நேரும் என எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்ததாகவும் தெரிகிறது.

இதில், பாலகிருஷ்ண தான் மிகவும் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தன் குடும்பத்தின் நிலை என்னவாகும்  என எண்ணி விசாரணையின்போது அவர் கண் கலங்கியதாக கூறப்படுகிறது.

அவர்கள் மூவரும் குடும்பத்தினரை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்  வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments