Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூமித்தாய் போல் நீங்களும் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வையுங்கள்! - சத்குருவின் பொங்கல் வாழ்த்து செய்தி!

Advertiesment
Sadhguru

Prasanth Karthick

, செவ்வாய், 14 ஜனவரி 2025 (08:05 IST)

பூமித்தாய் போல் நீங்களும் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வையுங்கள்! - சத்குருவின் பொங்கல் வாழ்த்து செய்தி!

 

 

பொங்கல் அல்லது சங்கராந்தி என்பது பூமித்தாய் வசந்த காலத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடி. நீங்களும் உங்களுக்குள் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள் என பொங்கல் தின வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியுள்ளார். 

 

மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் “நம் கலாச்சாரத்தில் பொங்கல் விழா நம் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான விழா.  எதற்கு என்றால் நம் உணவை உருவாக்குகின்ற செயலில் பல விலங்குகளுக்கு மிகவும் ஆழமான ஈடுபாடு இருக்கிறது. இப்போது நாம் விவசாயம் என்றால் டிராக்டரை காட்டுகிறார்கள். உணவினை டிராக்டரால் வளர்க்க முடியாது, அதன் மூலம் நிலத்தை உழ முடியும். 

 

நம்முடைய நிலம், நம்முடைய மண் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதில் சத்தான உணவு வளர வேண்டுமென்றால் இந்த ஆடு மாடுகள் மற்றும் பல விதமான விலங்குகளுடன் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது. 

 

அதனால் இந்த விழா நம்மை பற்றியது அல்ல, அந்த விலங்குகள் பற்றியது, அவர்கள் இல்லாமல் நாம் வாழ முடியாது என்று நமக்குத் தெரியும். நாம் இல்லாமல் அவர்கள் நன்றாக வாழ்வார்கள். அதனால் அவர்களுக்கு நம் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. எனக் கூறியுள்ளார். 

 

போகி குறித்து வெளியிடப்பட்டு இருக்கும் காணொளியில் “நம் வாழ்க்கையில் பழையது அனைத்தையும் நாம் அவ்வப்போது எரிக்கவில்லை என்றால் நம் வாழ்க்கையே பெரிய சுமையாகி விடும். 

 

போகிப் பண்டிகை என்பது வெறும் துணிமணி எரிப்பது மட்டும் இல்லை. நம் ஒரு வருட வாழ்க்கையில் வீட்டுக்குள்ளேயே மனஸ்தாபங்கள், சண்டைகள், விவாதங்கள் வரும் வெளியிலிருந்து கூட நிறைய வரும். இந்த நேரத்தில் பழையது எல்லாம் சேர்த்து எரித்து அனைத்தையும் புதியதாக ஆரம்பிக்கலாம் என்பதே இதன் முக்கியமான நோக்கம். இந்த ஒரு நோக்கம் நமக்கு இல்லை என்றால், சின்ன சின்ன விஷயங்கள் நம் வாழ்க்கை முழுக்க நம்மோடு வரும். இது நம் பழைய கர்மா அனைத்தையும் எரிப்பது போன்ற ஒரு வாய்ப்பு. 

 

அந்த நாளில் அனைத்தையும் சேர்த்து எரித்து விட்டீர்கள் என்றால் பழையது முடிந்தது. இப்போது புது வாழக்கையை, செயலை உற்சாகமாக புது ஆரம்பத்தோடு துவங்குவது நல்ல நோக்கம் தான்.” எனக் கூறியுள்ளார். 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் தினத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய தவெக தலைவர் விஜய்.. பெரும் சர்ச்சை..!