Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மா மீது மதிப்பு, மரியாதை வைத்திருப்பவர்: சந்திரபாபு நாயுடுவுக்கு சசிகலா வாழ்த்து..!

Advertiesment
அம்மா மீது மதிப்பு, மரியாதை வைத்திருப்பவர்: சந்திரபாபு நாயுடுவுக்கு சசிகலா வாழ்த்து..!

Mahendran

, செவ்வாய், 4 ஜூன் 2024 (16:33 IST)
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் சசிகலா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துக்கள் கூறியிருப்பதாவது:
 
ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவர், எங்களுடன் எப்போதும் நல்ல நட்பு பாராட்டி வருபவர். வலிகள் நிறைந்த பல போராட்டங்களை கடந்து, மக்களின் மனங்களை வென்றுள்ள திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் தலைமையில் ஆந்திராவில் அடுத்த ஆட்சி அமைய இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் நல்ல நட்புறவு மேம்பட வாய்ப்பு உள்ளது.
 
அன்பு சகோதரர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும்,  நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்களுக்கு பல்லாண்டு காலம் சேவையாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்கனா ஹிட்.. ஸ்மிருதி அவுட்..! அமைச்சர் பதவிக்கு இடம் காலி! – அமைச்சராக்க பாஜக ப்ளான்?