சசிகலா வெளியே வந்தால் அம்மாவின் தொண்டர்களை அவமதித்தவர்களுடன் நிச்சயம் சேரமாட்டார் என கூறியுள்ளார் தினகரன்.
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு சின்னம் வழங்கப்படுவதால் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும், வெற்றி பெறுவதிலும் சிரமங்கள் சந்தித்து வருகிறார் தினகரன். இதற்காகவே இடைத்தேர்தலில் போட்ட்யிடாமல் ஒதுங்கியும் உள்ளார்.
இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்ட தினகரன் சிறையில் உள்ள சசிகலா பற்றி பேசி உள்ளார். டிடிவி தினகரன் கூறியதாவது,
சசிகலா சிறைக்கு சென்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை சசிகலாவால் பதவிக்கு வந்தவர்கள் அவரை வந்து சந்திக்கவில்லை. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அம்மாவின் தொண்டர்களை அவமதித்தவர்களுடன் நிச்சயம் சேரமாட்டார் என தெரிவித்துள்ளார்.
சசிகலா அமமுகவை அதிமுகவுடன் இணைப்பார், அவர் நிச்சயம் அதிமுகவுக்கு துணை நிற்பார் என செய்திகல் வெளியாக வண்ணம் இருந்த நிலையில் தினகரன் இவ்வளவு உறுதியாக பேசியிருப்பது குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.