Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பரிசோதனை??? சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார் சசிகலா!

Advertiesment
கொரோனா பரிசோதனை??? சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார் சசிகலா!
, புதன், 20 ஜனவரி 2021 (18:24 IST)
பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்குத்தொடர்பாக சசிகலா அவரது உறவினராக இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு 4 ஆண்டு காலத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனை அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்தாலும் அவரைப் பற்றிய பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் உலா வந்துகொண்டிருந்தது. அவர் எப்போது விடுதலை ஆவார் என அமமுகவினர் எதிர்பார்த்து வந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழியும் தினகரனின் உறவினருமான சசிகலா வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளார் என கர்நாடக சிறைத்துறை அறிவித்ததாக நேற்று ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வரும்  சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு சிறைக்கு விரைந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவரை சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


மேலும் சசிகலாவுக்கு லேசான  காய்ச்சல் அறிகுறி இருப்பதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

விரைவில் விடுதலையாக போகின்ற நேரத்தில் சசிகலாவின் உடல்நலக்குறைவால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை கேஷ்பேக்! – அமேசானின் குடியரசு தின விற்பனை!