Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை கேஷ்பேக்! – அமேசானின் குடியரசு தின விற்பனை!

Advertiesment
இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை கேஷ்பேக்! – அமேசானின் குடியரசு தின விற்பனை!
, புதன், 20 ஜனவரி 2021 (18:15 IST)
இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு அமேசான் அறிவித்துள்ள Republic Day Sale ல் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தின விழா ஜனவரி 26ல் நடைபெறும் நிலையில் அமேசான் Great Republic Day Sale ஐ இன்று ஜனவரி 20 முதல் 23 வரை நடத்துகிறது. இதில் குறிப்பிட்ட எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றிற்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ரெட்மி 9 பவர் மாடல் மொபைல் வாங்கும் அனைவருக்கும் ரூ.1000 அமேசான் பே கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,999 ரூபாய் விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கடந்த நவம்பர் மாதத்தில் ரெட்மி வெளியிட்டது. அதுபோல சாம்சங் கேலக்ஸி எம்51 மாடல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு கூப்பன்களோடு 2000 வரை விலையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேல்க்ஸி எம்31 ப்ரைம் மாடல்களுக்கு கூப்பன்களோடு கூடிய ரூ.1000 விலை சலுகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் மொபைல்களில் அதிரடி விலை குறைப்பும் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல்நலக்குறைவால் சசிகலா விடுதலையாவதில் சிக்கலா? வழக்கறிஞர் விளக்கம்!