அதிமுக கொடியுடன் எண்ட்ரி கொடுத்த சசிக்கலா! – அதிர்ச்சியில் அதிமுக!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (12:29 IST)
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிக்கலா அதிமுக கொடி உள்ள காரில் புறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமுடன் உள்ள அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட சசிக்கலா அதிமுக கொடி முகப்பில் பொருத்தப்பட்டிருந்த காரில் பயணித்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “சசிக்கலா அதிமுக கொடியை காரில் பொருத்திக் கொண்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது. 2017ல் சசிக்கலா மற்றும் அவரது உறவினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்தவும் சசிக்கலாவுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments