'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற சசிகலாவின் சுற்றுப்பயணம் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 17ஆம் தேதி தென்காசியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா 18, 19 தேதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்பின் கடைசி நாளான 20ஆம் தேதி மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூரில் பொதுமக்களை சந்திக்க இருக்கிறார்.
'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் ஜூலை 17 - 20 வரை தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் செய்ய இருப்பதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஜூலை 17 பிற்பகல் 3 மணிக்கு தென்காசி காசிமேஜர்புரத்தில் தொடங்கும் சுற்றுப்பயணம் கீழப்பாவூர், ஆலங்குளம் ஒன்றியத்திலும் மக்களுடன் சசிகலாவின் சந்திப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் அதிமுக தொடர் தோல்வி அடைந்து வரும் நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக சசிகலா வலியுறுத்தி வருகிறார்.
அதிமுகவிலிருந்து பிரிந்த தினகரன், ஓபிஎஸ் உள்பட அனைவரும் அதிமுகவில் இணைய வேண்டும் என்றும் அப்போதுதான் திமுகவுக்கு எதிரான ஒரு வலுவான அரசியலை நடத்த முடியும் என்று சசிகலா வலியுறுத்தி இந்த பயணத்தை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.