Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படும் - காவல்துறை!

Advertiesment
சசிகலா காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படும் - காவல்துறை!
, திங்கள், 8 பிப்ரவரி 2021 (09:02 IST)
அதிமுக கொடியை சசிகலா அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் தற்போது அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கிறார். 
 
பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வருகிறார். அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அவரது காரின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் காவல்துறை உத்தரவு பிறப்பித்தும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் புறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில், தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடியில், காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சசிகலா இதை செய்ய தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கொடியை கையில் ஏந்தி காத்திருக்கும் அமமுக தொண்டர்கள் !