Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னம்மா கம் ராஜமாதா... சசிகலா வரவை கொண்டாடும் டிவிட்டர்!

Advertiesment
சின்னம்மா கம் ராஜமாதா... சசிகலா வரவை கொண்டாடும் டிவிட்டர்!
, திங்கள், 8 பிப்ரவரி 2021 (07:49 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில், #Sasikala, #TNwelcomesசின்னம்மா, #WelcomeRajamadha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றனர். 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை திரும்புவார் என ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் இன்று காலை 7:20 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இதனை அடுத்து தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவரை தமிழக எல்லையில் வரவேற்க அவரது ஆதரவாளர்களும் அமமுக கட்சியினர்களூம் தயார் நிலையில் உள்ளனர். பெங்களூருவில் இருந்து வரும் சசிகலாவுக்கு சென்னையில் 7 இடங்களில் வரவேற்பு அளிக்கத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை வந்ததும் சசிகலா, எம்ஜிஆர் இல்லமான ராமாவரம் தோட்டத்திற்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சாலை மார்க்கமாக வரும் சசிகலாவை வரவேற்க பலர் காத்திருக்கும் நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில், #Sasikala, #TNwelcomesசின்னம்மா, #WelcomeRajamadha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9, 11ஆம் வகுப்புகள் இன்று தொடக்கம்: பெற்றோர் ஒப்புதல் கடிதத்துடன் வரவேண்டும்!