பொதுச்செயலாளர் நான் தான் ... வண்டி கட்டி கிளம்பிய சசிகலா!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (08:25 IST)
சசிகலா தற்போது நான் தான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன் என சசிகலா பேட்டியளித்துள்ளார். 

 
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்தது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர ஈபிஎஸ் தரப்பு முயன்ற நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறினர். இதனைத்தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா தற்போது நான் தான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன் என சசிகலா பேட்டியளித்துள்ளார். இது குறித்து விரிவாக அவர் தெரிவித்ததாவது,

அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டபடி நான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன். அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். தொண்டர்கள் தெளிவான மனநிலையோடு இருக்கிறார்கள். விரைவில் அதிமுக ஆட்சி அமைப்பேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments