Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடைத்தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

இடைத்தேர்தலையொட்டி  3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!
, வியாழன், 7 ஜூலை 2022 (15:51 IST)
தமிழகத்தில் கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது.

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

இதையடுத்து வரும் 12 ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், உள்ளாட்சித்  இடைத்தேர்தல் நடைபெறுவதால், அப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவ்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரரிவித்துள்ளதாவது: கிராம மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். எனவே இன்று காலை 10 மணி முதல் வாக்குபதிவு நாளான 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், வரும் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்!