Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா புஷ்பா அரசியல் சதுரங்கம்: நெருக்கடி கொடுக்கும் பின்னணியில் இருப்பவர்?

சசிகலா புஷ்பா அரசியல் சதுரங்கம்: நெருக்கடி கொடுக்கும் பின்னணியில் இருப்பவர்?

Advertiesment
சசிகலா புஷ்பா அரசியல் சதுரங்கம்: நெருக்கடி கொடுக்கும் பின்னணியில் இருப்பவர்?
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (11:33 IST)
சர்ச்சைக்குரிய சசிகலா புஷ்பா எம்.பி.க்கு ஆதரவாக அதிமுகவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் சிலர் திரட்டப்படுவதாக அதிமுக தலைமைக்கு ரகசிய தகவல் சென்றுள்ளதாக பேசப்படுகிறது.


 
 
மாநிலங்களவையில் அதிமுக தலைமைக்கு எதிராக பேசி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றில் ஆஜராக இருக்கும் சசிகலா புஷ்பா, வேறு ஏதாவது வழக்கில் கைது செய்யப்படலாம் என பேசப்படுகிறது.
 
இந்நிலையில் அவரை கைது செய்தால் அதன் பின்னர் அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்க சசிகலா புஷ்பாவை பின்னால் இருந்து இயக்கும் தொழிலதிபர் திட்டமிட்டிருப்பதாக அதிமுக தலைமைக்கு தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
அந்த தகவலில், சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்த தொழிலதிபர் வளைத்துப் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பெரும் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளதாம். தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்ட செயலர்களையும் வளைத்துவிட்டார்களாம்.
 
டெல்லியில் இருக்கும் சசிகலா புஷ்பா தமிழகம் வந்தால் அவருக்கு நெருக்கடி கொடுத்து கைது செய்தால் இந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலர்கள் மூலம் நெருக்கடி கொடுக்க சசிகலா புஷ்பா, தொழிலதிபர் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை அமலாபாலை ஆர்யா திருமணம் செய்து கொண்டாரா?