Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறந்துபோன தந்தையின் சடலத்தை 8.கி.மீ தூரம் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற பிள்ளைகள்

Advertiesment
இறந்துபோன தந்தையின் சடலத்தை 8.கி.மீ தூரம் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற பிள்ளைகள்
, புதன், 28 மார்ச் 2018 (10:52 IST)
உத்திரபிரதேசத்தில் இறந்துபோன தந்தையின் சடலத்தை பிள்ளைகள் சுமார் 8.கி.மீ தூரம் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்ற சம்பங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான உத்திரபிரதேசத்தில் அவல சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்து போகும் நோயாளிகளை அவர்களது இருப்பிடத்திற்கு அழைத்து செல்லக் கூட மருத்துவமனைகள் முன்வருவதில்லை. இதனால் இறந்தவர்களின் உறவினர்களே, சம்மந்த்பட்டவர்களை தோளில் சுமந்தபடியும், சைக்கிளில் எடுத்துச் செல்லும் அவலங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு அம்மாநில அரசும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த பாடில்லை 
webdunia
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியை சேர்ந்த மன்ஷரம் என்பவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம், இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல எந்த ஒரு ஏற்பாடும் செய்து தர வில்லை. இதனால் இறந்தவரின் பிள்ளைகள், தங்களது அப்பாவின் உடலை 8 கி.மீ தொலைவு சைக்கிளில் இழுத்துச் சென்றனர். இச்சம்பவம் பலரது கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிருப்தி பாஜக தலைவர்களுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: திட்டம் என்ன?