சசிகலாவுக்கு அடுத்தடுத்த ஆப்பு: விவேக்கின் வீட்டில் சிக்கிய கடிதம்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (17:32 IST)
சசிகலா உறவினர்  விவேக் ஜெயராமன் வீட்டில் சசிகலா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
வருமான வரித்துறை விவகாரத்தில் சிக்கியுள்ள சசிகலா மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறன்றனர் சோதனையில் ஈடுப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள். அந்த வகையில் தற்போது விவேக் ஜெயராமன் வீட்டில் சிக்கிய கடிதம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
2017 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். அப்போது தான் சசிகலா புதிதாக பல்வேறு சொத்துக்களை வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் பல சொத்துக்கள் செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி வாங்கியது தெரியவந்தது. 
 
இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது தொடர்பாக சசிகலாவே தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் இந்த கடிதம் கிடைத்துள்ளது.
 
பெங்களூரு ஜெயிலில் இருந்த சசிகலா செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு இந்த கடிதத்தை எழுதி உள்ளார். அதில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments