Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 கோடி அபராதம் செலுத்திய சசிகலா!? – விரைவில் விடுதலையா?

Advertiesment
Tamilnadu
, புதன், 18 நவம்பர் 2020 (08:37 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலா விடுதலையை எதிர்பார்த்து அமமுகவினர் காத்துள்ள நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அபராத தொகையை சசிகலா செலுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அமமுக தரப்பிலோ எந்த விதமான கூட்டமும் நடத்தப்படாமல் உள்ளதால், அமமுகவினர் சசிகலாவின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிகிறது. அதற்கேற்றார்போல டிடிவி தினகரனும் கட்சி பணிகளை விடவும் சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லிக்கு பயணமானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சசிகலா ஜனவரிக்குள் விடுதலையாவார் என அமமுக தரப்பில் பேசிக் கொள்ளப்படுகிறது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.10.10 கோடியை சசிகலா நீதிமன்றத்திற்கு காசோலையாக செலுத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா விடுதலை செய்யப்படும் நாள் விரைவில் தெரிய வரும் என அமமுகவினர் ஆவலாக காத்துள்ளனர்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாயை பற்றி தவறாக பேசிய மக்கள்; ஆத்திரத்தில் மகன் செய்த செயல்! – கர்நாடகாவில் கொடூரம்!