Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா ’ஜெயிலில்’...தினகரன் கட்சி ’வாஸ் அவுட் ’.. அடுத்த டார்கெட் ரஜினி - கமல் - அதிமுகவின் வியூகம் !

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (14:21 IST)
வடமாநிலத்தவர்கள் தமிழக அரசியலையும், அரசியல்வாதிகளையும் புறம்தள்ளினாலும், அறிவாலும் , ஆற்றலாலும், தலைநகர் டெல்லி வரை வெற்றிக்கொடி காட்டி உலகையே வியக்க வைத்தவர்கள் தமிழர்கள்.
திருவள்ளுவர் முதற்கொண்டு பல்வேறு அறிஞர்கள் பிறந்து தமிழை மட்டுமல்ல அரசியலிலும், சமுதாய நாகரிகத்தையும் சங்ககாலத்தில் வழங்கி, மற்ற உலகநாடுகள் கண்முளிக்கும் முன்பே கடல் வணிகம் முதற்கொண்டு அனைத்திலும் தமிழர்கள் சிறந்து விளங்கிவருகின்றனர்.
 
அந்த வகையில், இன்று இந்திய அரசியலில் பாஜக எத்தனை பெரிய அசுர வெற்றி பெற்றாலும் கூட  தமிழகத்தில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. அந்தளவு நாம் யாருக்கு ஓட்டுப்போட  வேண்டும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்.
 
அதிமுக கட்சியை ஒரு இக்கட்டான நிலையில்தான் எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். அன்றைய நாள் முதல் இன்று வரை அவரை மக்கள் தெய்வமாக வழிபடுகிறவர்களும் உள்ளனர். 

அத்தைய மக்களின் ஆதரவில் கருணாநிதி என்ற மாபெரும் அரசியல் சாணக்கியரை சாய்ந்து தான் இருக்கும் வரை திமுகவை மீண்டு எழ முடியாதபடி தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பைத் தன் கையில் வைத்து ஆண்டார். மக்களுக்கும் சேவை செய்தார்.
 
அதே கட்சியின் மக்கள் செல்வாக்கோடு போராடி ஜெயலலிதாஅக்கட்சியின் பொதுச்செயலாலர் ஆனார் .  அவரும் ஆறுமுறை முதல்வர் பதவி வகித்து மறைந்தார்.
 
இப்போது, அதிமுக இ.பி. எஸ் - ஒ.பி.எஸ், என்ற இருவரின் கையில் உள்ளது.இருவரும் தமிழகத்தில் முதல்வர் மற்றும் முதல்வராக ஆட்சி புரிந்து வருகின்றனர்.
 
இந்த சூழ்நிலையில் இவர்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்கட்சித்  திமுக தலைவர் ஸ்டாலின் குடைச்சல் கொடுத்து வருகிறார். ஆனால் இப்போது, அதைவிட, இருபெரும் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களின்  அரசியல் படையெடுப்பால் அதிமுக தலைமைகள் சிறிது கலக்கம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூர் அஹ்ரகார சிறையில் கம்பி எண்ணிவரும் வேளையில், அவரது பினாமி பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் இருந்த ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளனர்.
 
 அதனால் இனி சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவரால் முந்தைய நிலை போல் செல்வாக்குடன்   செயல்படமுடியாது என்றே அரசியல் விமர்சர்கள் கூறுகிறார்கள்.
 
அதேபோல், அமமுக கட்சியை துவங்கியுள்ள தினகரன் நிலைமையும் சற்று சறுக்கலை சந்தித்துள்ளது. அவரது  கட்சியும் வாஸ் அவுட் என்ற நிலையை எட்டியுள்ளது. ஆனால், அவரது நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவால் தினகரன் தைரியமாக உள்ளார் எனவும் பேச்சு அடிபடுகிறது.
 
எனவே,  அதிமுகவின் தலைவர் பதவிக்கு இனிமேல்  சசிகலா, மற்றும் தினகரனால் எந்த காய்களை நகர்த்தமுடியாது என்பதால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்கள் அரசியல் ஆட்டத்தை, நாட்டை ஆளும் பாஜகவுடன் கைகுழுக்கி ஏறு நடை போடுகின்றனர்.
 
இந்த நிலையில், அதிமுகவின் அடுத்த டார்கெட்டாக, ரஜினி, கமலை நோக்கியே முதல்வர்  பழனிசாமி விமர்சனக் கல் எறிகிறார். தங்களுக்கு வரும் ஓட்டுகள் இருவரின் அரசியல் வருகையா சிதறுபட்டுவிடுமோ என்ற காரணத்தால் இருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில், முதல்வரின் தாக்குதலில்    இருந்து இருபெரும் சூப்பர் ஸ்டார்கள் தங்களை சமாளித்து எம்.ஜி.ஆர் போல் அரசியலில் தடம் பதிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்கலாம் என அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கிறார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments