Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”ரஜினி பேச்சு, அரை மணி நேரம் கழிச்சி போச்சு ”.. சீறும் சீமான்

Advertiesment
சீமான்
ரஜினியால் அரை மணி நேரம் கூட தன்னுடைய நிலைப்பாட்டில் நிற்கமுடியவில்லை என சீமான் கூறியுள்ளார்.

ரஜினி ”திருவள்ளுவர் மீதும் என் மீதும் காவி சாயம் பூச முடியாது” என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார். அதன் பிறகு தான் கூறியதை தவறாக புரிந்துகொண்டார்கள் என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”என் மீதும் திருவள்ளுவர் மீதும் காவி சாயம் பூச முடியாத என கூறிய ரஜினிகாந்தால் அரை மணி நேரம் கூட தன் நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை” என கூறினார்

மேலும் ”அவர் பேசிய பேச்சை அவரே பூசி மூழ்கினார்” என சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சீமான் கள அரசியலில் தீவிரமாக களமிறங்கியதிலிருந்து பல மேடைகளில் ரஜினி தமிழர் அல்ல, எனவும், தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது எனவும் பல மேடைகளில் ஆவேசமாக கூறிவந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட் வைத்து கொளுத்திய கணவன்! சென்னையில் கொடூரம்!