Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்காளர் பட்டியலில் சசிக்கலா பெயர் நீக்கம்!? – ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சசிக்கலா மற்றும் இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடத்தி வரும் நிலையில் சசிக்கலா மற்றும் அவரது சகோதரர் மனைவி இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா, இளவரசி ஆகியோருக்கான வாக்காளர் அடையாள அட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் முகவரியிலேயே இருந்தது. இந்நிலையில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது திட்டமிட்ட சதி என அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நக்சலைட்டுகளுக்கு தக்க சமயத்தில் பதிலடி! – அமித்ஷா உறுதி!