சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் பலியானதற்கு பதிலடி கொடுக்க இருப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் நக்சலைட்டுகல் தரப்பிலும் 12-20 பேர் வரை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தால் அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் “நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலுக்கு தக்க சமயத்தில் பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.