Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 26 February 2025
webdunia

சசிகலாவுக்கு நிம்மதி இல்லை - திவாகரன் ஓப்பன் டாக்

Advertiesment
சசிகலாவுக்கு நிம்மதி இல்லை - திவாகரன் ஓப்பன் டாக்
, வெள்ளி, 30 மார்ச் 2018 (14:25 IST)
சசிகலாவிற்கு கடந்த பல வருடங்களாகவே நிம்மதி இல்லை என அவரின் சகோதரர் திவாகரன் பேசியுள்ளார்.

 
சசிகலாவின்  கணவர் நடராஜனின் படத்திறப்பு விழா இன்று காலை தஞ்சாவுரில் உள்ள தமிழரசி மண்டபத்டில் நடைபெற்றது.
 
இந்த விழாவில் தினகரன், திவாகரன், கவிஞர் வைரமுத்து, பழ நெடுமாறன், சீமான், இயக்குனர் பாரதிராஜா, தி.க. தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
கீ.வீரமணி பேசும்போது ‘எதையும் தாங்கும் சசிகலா நடராஜன் மறைவையும் தாங்கிக் கொள்ள வேண்டும். தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய நடராஜன், எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை’ எனப் பேசினார். 
 
அதேபோல், அந்த விழாவில் பேசிய நெடுமாறன் ‘எங்கள் குடும்பத்தில் ஜாதகம் பார்க்காமல் செய்யப்பட்ட திருமணம் சசிகலா-நடராஜன் திருமணம்தான்’ என்றார். அதேபோல், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைவதற்கு நடராஜனே காரணமாக இருந்தார். அவர் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என நல்லகண்ணு பேசினார்.
 
அந்த மேடையில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் ‘என் சகோதரி ஆனாலும் சசிகலாவை பார்த்து நான் பயப்படுவேன். 35 ஆண்டுகளாக அவர் நிம்மதியாக வாழவில்லை. துன்பத்திற்கு மேல் துன்பங்களை அவர் சந்தித்து வருகிறார்’ என கண்கலங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய் தவறி பேசிவிட்டேன் : அமித்ஷா விளக்கம்